!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

அரசின் அடக்குமுறை காரணமா?: போராட்டத்தில் மாற்றுத்திறனாளி மரணம்


 மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் பங்கேற்ற, 67 வயது முதியவர் மயங்கி விழுந்து, இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'அரசின் அடக்குமுறை தான் காரணம்' என, குற்றம் சாட்டி உள்ள மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.நேற்று முன்தினம், சென்னையில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்த மாற்றுத் திறனாளிகள், வெளி மாவட்டங்களில் இருநது, சென்னை நோக்கி வந்தோரை, ஆங்காங்கே போலீசார் மடக்கி கைது செய்தனர்.

இவ்வாறு பல இடங்களிலும் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள், சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டனர்; மாலையில், போலீசார் 
விடுவித்தனர்.

ரத்த வாந்தி
ஆனால், 'அரசு கோரிக்கைகளை ஏற்கும் வரை வெளியேற மாட்டோம்' எனக்கூறி, பல பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இரவு, 9:00 மணி அளவில், வேலுார் மாவட்டம், காட்பாடி தாலுகா, மாதனுாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குப்புசாமி, 67, என்பவர் தலை வலிப்பதாக கூறினார். திடீரென, ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். 
போலீசார் அவரை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை தொடர்ந்த நிலையில், அதிகாலை, 4:00 மணிக்கு அவர் பரிதாபமாக இறந்தார். 
இறந்த குப்புசாமியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது மகன் சரவணனிடம், நேற்று மதியம் ஒப்படைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் ஆறுதல்
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள், குப்புசாமிக்கு அஞ்சலி செலுத்தினர். அவர் குடும்பத்திற்கு தி.மு.க.,வும், மக்கள் நலக்கூட்டணியும் தலா, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ளன.


'மாற்றுத்திறனாளிகளை அரசு எதிரிகளாக பார்க்கிறது'பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:மாற்றுத்திறனாளிகளை அரசும், காவல்துறையும் எதிரிகளாக பார்க்கும் கொடுமை தொடர்கிறது. அவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதோடு, உயிர் இழந்த குப்புசாமி குடும்பத்துக்கு, அரசு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மேலும் தீவிரப்படுத்துவோம், ''அரசின் அலட்சியம், போலீஸ் துறையின் நெருக்கடியுமே, குப்புசாமி மரணத்துக்கு காரணம். இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்; போராட்டத்தை ஒடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்காது. கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும்; போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்; அதைத்தவிர வேறு வழியில்லை.எஸ்.நம்புராஜன்தலைவர், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு

போராட்ட காரணம்

வேலை வாய்ப்பில், 3 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்; மாதாந்திர உதவித்தொகையை, 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்; 40 சதவீதம் ஊனம் இருந்தாலும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png