!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

94 லட்சம் பேருக்கு தமிழகத்தில் வேலையில்லை

'தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து விட்டு, காத்திருப்போரின் எண்ணிக்கை, 94 லட்சமாக உயர்ந்துள்ளது' என, தமிழக வேலைவாய்ப்பு துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர், 31ன் படி, பல்வேறு வகை படிப்புகள் முடித்து, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை, வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன் புள்ளி விவரம்:
● வேலை வாய்ப்பு இல்லாத, ௯௪ லட்சம் பேரில், 
43 லட்சம் பேர் பெண்கள். 11 லட்சம் பேர் சிறப்பு தகுதி பெற்ற மாற்று திறனாளிகள், அகதிகள், கலப்பு திருமணம் செய்தோர்
● பட்டப்படிப்பு முடித்தோர், 60 லட்சம் பேர்
● பிளஸ் 2 முடித்தவர்கள், 35 லட்சம் பேர்
● இடைநிலை ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், 2.28 லட்சம் பேர்
● பி.இ., - பி.டெக் முடித்தவர்கள், 2.28 லட்சம் பேர்
● எம்.இ., முடித்தவர்கள், 2.21 லட்சம் பேர்
● பி.எஸ்சி., போன்ற இளநிலை அறிவியல் 
முடித்தவர்கள், ௬ லட்சம் பேர்
● பி.ஏ., முடித்தவர்கள், 4.48 லட்சம் பேர்
● வணிகவியல் பட்டம் பெற்றவர்கள், 
3.37 லட்சம் பேர்
● எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள், 3,883 பேர்
● கால்நடை மருத்துவம் படித்தவர்கள், 1,160 பேர்
● சட்டம் முடித்தவர்கள், 748 பேர்.
முதுநிலை படிப்பு
● ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், 2.67 லட்சம் பேர்
● டாக்டர்கள், 734 பேர்
● சட்டம் படித்தவர்கள், 242 பேர்
● மற்ற பாடப்பிரிவுகளில் முதுகலை படிப்பு முடித்தவர்கள், 2.22 லட்சம் பேர்
● வேளாண் படிப்பில் பட்டம் பெற்றவர்கள், 4,000 பேர்; முதுகலை பட்டம் முடித்தவர்கள், 633 பேர்.
கடந்த ஆண்டு, 85 லட்சம் பேர் மட்டுமே வேலைக்காக காத்திருந்த நிலையில், தற்போது, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில், ஒன்பது லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png