!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

அச்சம் தவிர்த்தால் உச்சம் தொடலாம் (தேர்வு காலங்கள்

''பொதுத் தேர்வு எழுதும் அறைக்குள் சென்றவுடன் ஏற்படும் பயத்தில் இருந்து ஒவ்வொரு மாணவரும் விடுபட வேண்டும். அப்போது தான் அதிக மதிப்பெண்கள் எடுக்க முழுஅளவில் சிந்திக்க முடியும்,'' என, கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் மதுரை மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் (சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி) சந்தோஷ் தெரிவித்தார்.
மதுரை மருத்துவக் கல்லுாரியில் படித்து வரும் இவர், இந்தாண்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தரும் 'டிப்ஸ்கள்' ...இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு அட்டவணை மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் முழு அளவில் தயாராக அவகாசம் உள்ளது. கடின பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் படிக்க வேண்டும். இதை ஒரு பொதுத் தேர்வு என கருதாமல், வழக்கமான திருப்புதல் தேர்வாக நினைத்து எழுதினால் தேர்வு பயம் நீங்கும்.
அதிகாலை 5.00 மணிக்கு படிக்க துவங்கலாம். இரவு 11.00 மணிக்கு துாங்க வேண்டும். அப்போது தான் மறுநாள் தேர்வுக்கு புத்துணர்வுடன் செல்ல முடியும். படிக்கும் போது கடின பாடம் ஒன்றை படித்தால் அதன்பின் கொஞ்ச நேரம் 'பிரேக்' விட்டு அடுத்து எளிதான பாடம் ஒன்றை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் சோர்வு ஏற்படாது.
நான் மாநில 'ரேங்க்' எதிர்பார்த்து படித்தேன். ஆனால் மொழிப் பாடத்தில் என் சிறிய கவனக்குறைவால் மதிப்பெண் குறைந்தது. மாநில 'ரேங்க்' பெற 'மெயின்' பாடங்கள் போல மொழிப் பாடங்களையும் இலக்கண பிழையின்றி படிக்க வேண்டும். படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பாட வினாத்தாளை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி பழக வேண்டும்.
'தேர்வில் வினாத்தாள் கடினமாக இருக்கும்,' என நினைத்து படிக்க வேண்டும். பாடங்களை முழுமையாக படித்து விட்டு அதன் பின் 'புளு பிரிண்ட்' குறித்து தெரிந்து கொண்டால் வினாத்தாள் எளிதாக இருக்கும். தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு பெற்றோர் நண்பர்களாக இருக்க வேண்டும். சுகாதாரத்துறை கண்காணிப்பாளரான என் தந்தை ராமநாதன், தனியார் பள்ளி ஆசிரியை தாயார் புவனேஸ்வரி ஆகியோர் தேர்வு நேரத்தில் விடுப்பு எடுத்து ஜூஸ், 
இளநீர் தந்து என் தேவைகளை பூர்த்தி செய்தனர். பள்ளி நிர்வாகமும் என் மீது அக்கறை செலுத்தியது.நன்றாக படித்தாலும் மனதில் தேர்வு பயம் இருந்தால் மதிப்பெண்ணை இழந்து விடுவோம். எனவே, தேர்வு என்ற அச்சத்தை நீக்கவிட்டால் வெற்றியின் உச்சத்தை எட்டலாம். 
இவ்வாறு தெரிவித்தார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png