!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 25 பிப்ரவரி, 2016

சென்னை பல்கலை பிஎச்.டி., படிப்பில் குளறுபடி இன்று அவசர சிண்டிகேட் கூட்டம்

சென்னை பல்கலையில், பிஎச்.டி., மற்றும் டி.லிட்., படிப்பில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து முடிவு செய்ய, இன்று அவசர சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது.இது குறித்து, பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரி வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்:முதுகலை படிப்புக்குப் பின், பிஎச்.டி., படிப்பில் ஆய்வாளராக சேரும் ஒருவர், குறைந்தது, 3 - 6 ஆண்டுகளுக்குள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும். எம்.பில்., பட்டம் பெற்றிருந்தால், 2 - 5 ஆண்டுகளுக்குள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின், 'வைவா' நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் நபருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும்.

இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன், பிஎச்.டி.,க்கு விண்ணப்பித்த சிலர், தற்போது தான் ஆராய்ச்சியை முடித்து, சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனால், பல்கலை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அதேபோல், டி.லிட்., படிக்க, பிஎச்.டி., முடித்து, 10 ஆண்டுகள் கழித்தே விண்ணப்பிக்கலாம். ஆனால், ௨௦௧௫ செப்டம்பரில் பிஎச்.டி., முடித்த சிலர், ஒரே மாதத்தில், டி.லிட்., படிக்க விண்ணப்பித்துள்ளனர்.
இதை அனுமதிக்க விதிகள் இல்லை என்பதால், சிண்டிகேட் கூட்டத்தில் இந்த கோரிக்கையை உறுப்பினர்கள் நிராகரித்தனர்.ஆனால், உயர் கல்வித் துறை உயர் அதிகாரிகளில் சிலர், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, மீண்டும் சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கு அனுமதி பெற முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதை அனுமதித்தால், சென்னை பல்கலை இணைப்பில் உள்ள, 100 கல்லுாரிகளின் பேராசிரியர்கள் ஒட்டு மொத்தமாக, டி.லிட்., படிப்புக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு தகவல்கள் கிடைத்தன.இந்த பிரச்னைகள் குறித்து முடிவு செய்ய, இந்த மாத சிண்டிகேட் கூட்டம், இன்று அவசரமாக கூட்டப்படுகிறது. உயர் கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா பங்கேற்க உள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png