!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்: அவசியமாகின்றன பெற்றோர்கள் அறிவுரை
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி நேரங்களில் பஸ் வசதி குறைவால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படி அபத்து பயணம் மேற்கொள்வதால் விபத்து அபாயம் உள்ளது.இதை தடுக்க பெற்றோர்கள் அறிவுரையும் அவசியமாகின்றன. மாவட்டத்தில் சிவகாசி உட்பட பல பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தினந்தோறும் பஸ்களில் வந்து செல்கின்றனர். இதனால் பள்ளி நேரமான காலை 7 முதல் 9.30 மணி வரை , மாலை 3.30 இரவு 6 மணி வரை மாணவர்களின் கூட்டம் அதிகம் உள்ளது.


குறைவான எண்ணிக்கை:மேலும் கிராமப்புறங்களில் பள்ளி நேரங்களில் மிக குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் அதில் கடுமையான கூட்டம் இருக்கும். பெரும்பாலும் பள்ளி நேரங்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறே பஸ்களில் பயணம் செய்கின்றனர். கண்டக்டர் ,டிரைவர் எத்தனை முறை படிக்கட்டிலிருந்து மேலே வரும் படி கூறினாலும், அவர்கள் அதை கண்டு கொள்வதில்லை.

சமூக ஆர்வலர்கள்:இது போல் பயணித்து பல விபத்துகள் நடந்தாலும் மாணவர்கள் அதை பொருட்டாகவே நினைப்பதில்லை. இதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இப்பிரச்னை குறித்து சமூக ஆர்வலர்கள் கூடுதல் பஸ்கள் விடபோக்குவரத்து கழக அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித பயனும் இல்லை.

அறிவுரை:இதற்கு நல்லதொரு தீர்வாக பெற்றோர் தங்களது பிள்ளைகளை படிக்கட்டு பயணத்தை தவிர்க்க அறிவுரை கூற வேண்டும். மேலும் பள்ளி நேரங்களில் கூடுதலான அரசு பஸ்கள் இயக்கி மாணவர்களின் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கவும் போக்குவரத்து கழகமும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

போலீசார் அபராதம்:சுக்கிரவார்பட்டி வெண்மணி,"" மாவட்டம் முழுவதும் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் இந்நேரங்களில் குறைவாக பஸ்கள் இயக்கப்படுவதால், மாணவிகள் கூட படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்லும் நிலை உள்ளது. கடந்த ஓராண்டிற்கு முன் படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது போக்குரவத்து போலீசார் அபராதம் விதித்தனர். அந்த நடவடிக்கையும் தொடர வேண்டும்,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png