!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 29 பிப்ரவரி, 2016

இன்று மத்திய பட்ஜெட்:வரி சலுகைகள் ரத்தாகுமா?
:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசின், மூன்றாவது பொது பட்ஜெட்டை, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்கிறார்.
மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, மே மாதத்தில், மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.

உலக பொருளாதாரம் எதிர்மறையான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், வளர்ச்சியை அதிகரிக்க, மக்களின் செலவினத்தை அதிகரிப்பதற்கான வளங்களைக்கண்டறிய வேண்டியுள்ள நிலையில், 2016 - 17க்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று தாக்கல் செய்கிறார்.


வறட்சியால் கிராமப்புறங்களில் விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளதால், வேளாண் துறையையும், தொழில் துறையையும் சமநிலையுடன் ஊக்குவிக்கும் வகையிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய சவாலை, அமைச்சர் எதிர்கொண்டுள்ளார்.

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கான செலவை தொடர்வது, பயிர் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுப்படுத்துவது குறித்த அறிவிப்புகளை, அவர், பட்ஜெட்டில் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.சமூக திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும், சீர்திருத்தங்களை வேகப்படுத்துவதற்காக, அன்னிய முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டிய நெருக்கடியும் அவருக்கு உள்ளது.

ரூ.1.02 லட்சம் கோடி:அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த,1.02 லட்சம் கோடி ரூபாய் என்ற பெருந்தொகையை ஒதுக்க வேண்டிய அவசியம் உள்ளது. நிதிப் பற்றாக்குறையை, 3.5 சதவீதமாகக் குறைக்கப் போவதாக, கடந்த பட்ஜெட்டில்
அறிவித்த அமைச்சர் ஜெட்லி, அதில் சமரசம் செய்து கொள்ளாமல், இப்பிரச்னையை எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

'கார்ப்பரேட் வரிகளை, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக படிப்படியாகக் குறைக்கப்படும்' என, 2015ல், வெளியிட்ட அறிவிப்பை நிறைவேற்ற, இந்த பட்ஜெட்டில் நடவடிக்கைகளை அறிவிப்பார் என தெரிகிறது. முக்கியமாக, வரிச் சலுகைகளை வாபஸ் பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு, பட்ஜெட்டில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு...
வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இருக்காது
வரிச் சலுகைகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படலாம்
வருவாயைப் பெருக்க, மறைமுக வரிகள் உயர்த்தப்படலாம்
புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படலாம்
சேவை வரி, 14.5 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக அதிகரிக்கப்படலாம்
'துாய்மை இந்தியா' திட்டத்துக்காக, 'செஸ்' வரி விதிக்கப்பட்டதைப் போல, 'ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா' திட்டங்களுக்காக புதிய, 'செஸ்' வரிகள் அமல்படுத்தப்படலாம்
மேலும் பல துறைகளில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படலாம்
இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம்
தங்கத்துக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படலாம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png