!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஏற்பு

மிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை, நேற்று சென்னையில், மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:

சென்னையில் உள்ள, 50 மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து பேசினேன். அவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்; அவை அனைத்தும் ஏற்கப்பட்டன. மேலும், ஸ்டார் குறியீட்டை தொடர்ந்து, வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை, 'டைப்' செய்து, 1950 என்ற எண்ணுக்கு, 'எஸ்.எம்.எஸ்.,' அனுப்பினால், அவர்கள் பெயர், மாற்றுத்திறனாளி என, பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

கோரிக்கைகள் என்ன?
* மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓட்டுச்சாவடிகளில், 'வீல் சேர்' வழங்க வேண்டும் பார்வையற்றவர்களுக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர் கூறும் வேட்பாளர் பட்டியல் வரிசை எண்ணும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள வரிசை எண்ணும், சில நேரங்களில் மாறுபடுகிறது; இதை தவிர்க்க வேண்டும்
* வாக்காளர் பட்டியலில், திருநங்கையரின் பெயர்களை தனியே பதிவு செய்வது போல், மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்
* மாற்றுத்திறனாளிகளையும், அவர்களுக்கு உதவியாக வந்தவர்களையும், ஓட்டுச்சாவடியில் வரிசையில் காத்திருக்க வைக்காமல், அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png