!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: செய்தித்துறை செயலாளராக உதய சந்திரன் நியமனம்

தமிழக தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மை செயலாளராக இருந்த கே.ராஜாராமன், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பெரம்பலூர் மாவட்ட முன்னாள் கலெக்டர் டாரஸ் அகமது, மாநில ஊரக சுகாதார திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார்.
மத்திய அரசின் கனரக தொழிற்சாலைத் துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய அம்புஜ் சர்மா, மாநிலப் பணிக்கு திரும்பியுள்ளார். அவர் தொழிற்சாலைகள் கமிஷனர் மற்றும் தொழிற்சாலை, வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை (செலவீனங்கள்) செயலாளர் டி.உதயசந்திரன், தமிழ் மேம்பாடு, செய்தித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குனர் சந்தீப் நந்துரி, மதுரை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்படுகிறார். நகராட்சி நிர்வாக இணைக் கமிஷனர் எம்.ஆசியா மரியம், சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png