!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

தேர்வர்கள் வாடிக்கையாளரா? பல்கலை அறிவிப்பால் அதிர்ச்சி
தவிப் பேராசிரியர் பணிக்கான மாநில தகுதித் தேர்வான, 'செட்' தேர்வு, பிப்., 21ல் நடக்கவுள்ளது. அரசு சார்பில், அன்னை தெரசா பல்கலை இந்த தேர்வை நடத்த உள்ளது. செட் தேர்வு அறிவிப்பு வெளியானது முதல், பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. 



இந்நிலையில், செட் தேர்வு விண்ணப்பதாரர்களின் வழிகாட்டுதலுக்காக, தனி மையம் அமைக்கப்பட்டு, இணையதளத்தில் அதற்கான மொபைல் போன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்பில், 'வாடிக்கையாளர் உதவிக்கு' என்ற பொருளில், 'கஸ்டமர் சப்போர்ட்' என குறிப்பிட்டு உள்ளனர்.
இது குறித்து, முதுகலை பட்டதாரிகள் கூறியதாவது:

ஏற்கனவே, செட் தேர்வு முடிவுகளில், பல்கலைகள் மற்றும் மாநில உயர் கல்வி அதிகாரிகளின் தலையீடு உள்ளதாக, சந்தேகம் உள்ளது; தேர்வு நடைமுறையிலும் குழப்பம் உள்ளது. இந்நிலையில், தேர்வர்களை, 'வாடிக்கையாளர்' என, குறிப்பிட்டுள்ளதன் மூலம், தேர்வு முடிவுகள் விற்பனை செய்யப்படுமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இது குறித்து, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, நியாயமான தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png