!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 23 மார்ச், 2016

பிளஸ் 2வில் முப்பருவ முறை:கல்வியாளர்கள் வலியுறுத்தல்
'தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், முப்பருவ முறையை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், கல்வியாளர்கள், எஸ்.எஸ்.ராஜகோபாலன் மற்றும் வசந்தி தேவி, பேராசிரியர் சிவக்குமார், ஆசிரியர் மூர்த்தி ஆகியோர், நேற்று அளித்த பேட்டி:  தமிழகத்தில், கல்வி முறையில் பல குழப்பங்கள் உள்ளன. அதை மாற்றி மாணவர்களுக்கு தரமான, அழுத்தமில்லாத கல்வியை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, மறைமுகமாக தனியாருக்கு ஆதரவான நடவடிக்கைகளில், பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.


அரசு பள்ளிகளில், ௬ம் வகுப்பில், கணினி அறிவியல் பாடத்தை, கண்டிப்பாக கற்றுத் தரவேண்டும். தமிழ் வழி கல்வியை ஊக்குவிக்க வேண்டும். கல்வியை, மத்திய
பட்டியலில் இருந்து மாற்றி, மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி, தரமான ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி, சில ஆண்டுகளாக அமலில் இருந்தாலும், முப்பருவ முறை அனைத்து வகுப்புகளுக்கும் வரவில்லை. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களுக்கும், முப்பருவ தேர்வு முறையை கொண்டு வர வேண்டும்.இதுபோன்ற பல சீரமைப்புகளை, கல்வித் துறையில் மேற்கொள்ள, தமிழக அரசியல் கட்சிகள் முன்வந்து, தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, புதிய ஆட்சியில் அமல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png