!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 22 மார்ச், 2016

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் மாற்றம் செய்யப்பட்ட '15 நிமிடங்கள்'
:பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் இந்தாண்டு ஒரு மதிப்பெண் பகுதிக்கும், தியரி பகுதிக்கும் நேரம் ஒதுக்கீட்டில் 15 நிமிடங்கள் மாற்றம் செய்யப்பட்டது.கடந்தாண்டு காலை 10.15 மணிக்கு தேர்வு துவங்கி, 75 மதிப்பெண்ணிற்கான ஒரு மதிப்பெண் வினா பகுதி காலை 11.30 மணி வரை, தியரி பகுதி 11.30 முதல் 1.15 மணி வரை எழுத அனுமதிக்கப்பட்டது.ஆனால், ஒரு மதிப்பெண் பகுதியில் ஓ.எம்.ஆர்., சீட்டில் விடைகளை குறிக்கும் கட்டங்களில் குறியீடு (ஷேட்) செய்ய 75 நிமிடங்களுக்கு பதில் 90 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்ய மாணவர்கள் வலியுறுத்தினர்.இதன்படி நேற்று நடந்த தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதிக்கு 15 நிமிடங்கள் அதிகரித்து, தியரி பகுதிக்கு 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டன.


'சீரியல்' மாற்றம்: மேலும், நான்கு வகை வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. கடந்தாண்டு 'ஏ', 'பி', 'சி', 'டி' என வினாத்தாள் சீரியல் எண் குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்தாண்டு நான்கு கட்டங்கள் அச்சிடப்பட்டு அதில் 'சிங்கிள் டேஷ்', 'டிபுள் டேஷ்', 'டிரிபுள் டேஷ்'... என கட்டங்களை கருமை நிறத்தால் நிரப்பும் வகையில் வினாத்தாள் முன் பகுதி அமைந்திருந்தது. எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

சென்டம் எளிது: இத்தேர்வு குறித்து மதுரை கருங்காலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பரமசிவம் கூறியதாவது:இத்தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்தன. 2 மற்றும் 5 மதிப்பெண் பகுதி வினாக்கள் அடிக்கடி கேட்கப்பட்டவையாக இருந்தன. ஆனால் ஒரு மதிப்பெண் பகுதியில் சில வினாக்கள் சிந்தித்து விடையளிக்கும் வகையில் இருந்தன. 67 வது வினாவிற்கான (டபுள் டேஷ் டைப்) விடை தமிழில் அச்சிடாமல், ஆங்கிலத்திலேயே அச்சிடப்பட்டிருந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் சென்டம் எளிதில் பெறலாம், என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png