!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 25 மார்ச், 2016

2 டி பார்கோடு, வாட்டர் மார்க்குடன் புது வடிவில் பிளஸ் 2 மார்க் ஷீட்

தமிழகத்தில் இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் புதிய வடிவில் தயாராகி வருகிறது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 4 முதல் பிளஸ் 2 தேர்வும், மார்ச் 15 முதல் 10ம் வகுப்பு தேர்வும் நடந்து வருகிறது. இப்போதே பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியும் நடந்து வருகிறது. இதை விரைந்து முடிக்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. மே 16 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ் பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும். வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில் தயாரிக்கப்படும். பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும். ‘வாட்டர் மார்க்’’ என்ற ரகசிய குறியீடு, ‘2 டி பார்கோடு’’ மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி எண், பதிவு எண் போன்றவை இடம் பெறும். தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும் சான்றிதழில் இணைக்கப்படும். இந்த சான்றிதழ் உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும் வகையில், சென்னை, அண்ணா பல்கலையிலுள்ள தேர்வுத் துறையின், கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்தில், சரிபார்க்க அதிகாரம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png