!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 17 மார்ச், 2016

2 மாணவர்கள், 2 ஆசிரியர்கள்... இப்படியும் நடக்குது அரசு பள்ளி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் என்ற நிலையில் செயல்படுகிறது.

கடந்த 1966 ல் துவங்கப்பட்ட இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர். காலப் போக்கில் சுற்றுப் பகுதியில் பள்ளிகள் வர, இப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. கடந்த ஆண்டு 6 மாணவர்கள் , இரண்டு ஆசிரியர்களுடன் செயல்பட்ட இப்பள்ளியில், இந்த ஆண்டு அதே 2 ஆசிரியர்களுடன் இரு மாணவர்களே கல்வி பயில்கின்றனர்.


பள்ளியில் கழிப்பறை, விளையாட்டு மைதானம் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. இப்படி வசதிகள் பல இருந்தும் மாணவர்கள்தான் இல்லை. 2 மாணவர்களை கொண்டு செயல்படும் இப்பள்ளியில் ஆசிரியர்களும் தினமும் பள்ளியில் ஆஜராகி கல்வி கற்று கொடுக்கின்றனர்.
மூடுவதுதான் வழி: உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், ' பள்ளியை ஆய்வு செய்து, மாணவர்கள் சேர்க்கைக்கு ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்படும். இல்லையென்றால் பள்ளியை மூடி விட வேண்டியது தான்,'என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png