!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 21 மார்ச், 2016

பிளஸ்- 2 கணினி அறிவியல்: 4 வகை வினாத்தாள் தயார்
:பிளஸ்- 2 கணினி அறிவியல் தேர்வுக்கு நான்கு வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. 

அரசு தேர்வுத்துறை செய்திக்குறிப்பு:பிளஸ்-2 கணினி அறிவியல் தேர்வு இன்று (21ம் தேதி) நடக்கிறது. இதில் 30 பக்கங்களுக்கு கோடு இல்லாத விடைத்தாள் வழங்கப்படும். மேலும் 75 ஒரு மார்க் அப்ஜெக்டிவ் வகை வினாக்களுக்கு விடை எழுத வேண்டும். இதற்கு ' ஆப்டிகல் மார்க்கிங் ரெசக்னிஷன்' என்ற ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் இதுபோன்ற விடைத்தாள் பயன்படுத்தப்படுகிறது.


இந்த ஓ.எம்.ஆர்., விடைத்தாள் சேதம் அடையாமல் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். விடைத்தாள் முகப்பில், பெயர் மற்றும் பதிவெண் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். விடைகளை குறிக்கும் கட்டங்களை கருப்பு பால்பாய்ன்ட் பேனாவை பயன்படுத்தி 'ஷேடு' செய்ய வேண்டும். விடைத்தாளில் மாணவர்கள், ஆசிரியர் கையெழுத்து இடும் போது அதற்கான கட்டத்தை கையெழுத்து தாண்டக் கூடாது. விடைத்தாள் சேதம் அடைந்தால் மாற்று விடைத்தாள் பெறலாம்.

75 மதிப்பெண் 'அப்ஜெக்டிவ்' வகை கேள்வி என்பதால், 'காப்பி' அடிப்பதை தடுக்க நான்கு வகையான வினாத்தாள் வழங்கப்படுகிறது. அருகருகே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெவ்வேறு வகையான வினாத்தாள் வழங்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png