!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 15 மார்ச், 2016

பக்க விளைவுகள் ஏற்படுத்தும்:344 மருந்துகளுக்கு அதிரடி தடை
:பக்க விளைவுகள் ஏற்படுத்தும், 344 மருந்துகள் விற்பனைக்கு, மத்திய அரசு, அதிரடியாக தடை விதித்துள்ளது.நாட்டில், இருமல் மருந்துகள், ஆன்டிபயாடிக், வலி நிவாரணிகள் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்தகங்களில் விற்கப்படுகின்றன. இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க, டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், இதுபோன்ற மருந்துகளை விற்கக் கூடாது என்றும், இந்த மருத்துகள் குறித்த ஆவணங்களை பராமரிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.


அடுத்தகட்டமாக, பக்க விளைவுகளை ஏற்படுத்தும், இருமல் மருந்துகள், ஆன்டிபயாடிக், வலி நிவாரணி மருந்துகள் என, 344 வகை மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது.இக்குழு, இந்த மருந்துகள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
அதன்பின், இது சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி, மருந்து கம்பெனிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.போதுமான கால அவகாசம் வழங்கியும், இந்த நோட்டீசுக்கு பல நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை. இதையடுத்து, இந்த, 344 மருந்துகள் விற்பனைக்கு தடை விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், அது, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

'கோரக்ஸ்' உற்பத்தி நிறுத்தம்:மார்ச், 10ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை தொடர்ந்து, இருமல் மருந்தான, 'கோரக்ஸ்' உற்பத்தியை, அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. இந்த தடை பட்டியலில், நிமசுலைட் எனும் வலி நிவாரண மருந்து, ஆன்டிபயாடிக் மருந்துகளும் இடம் பெற்றுள்ளன.

ஐகோர்ட் தடை:'கோரக்ஸ்' இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு, டில்லி ஐகோர்ட், தடை விதித்துள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png