!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 9 மார்ச், 2016

அரசு பள்ளிகளில் பின் தங்கிய திருவாரூர் மாவட்டம்
தமிழக அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வில், 8ம் வகுப்பில், தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும், திருவாரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது. 

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், செயல்முறை வழி கல்வி திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித்துறை நடைமுறை படுத்தியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வி துறையில், தனியாக திட்ட இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி பணியாற்றுகிறார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசால் கோடிக்கணக்கில் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியை எப்படி செலவு செய்து, மார்ச்சுக்குள் கணக்கு கொடுப்பது என்பதே, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் முக்கிய பணி. மாணவர்களுக்கு புதுமையான முறையில் கற்று கொடுக்கின்றனரோ, இல்லையோ, ஆசிரியர்களை அவ்வப்போது அழைத்து, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி, டீ, காபி, மதிய உணவு உபசரிப்புடன் ஒரு நாள் முழுவதும், பொழுதை போக்கி அனுப்பி விடுவர். 



எஸ்.எஸ்.ஏ.,வில் பெற்ற பயிற்சியை மாணவர்களுக்கு ஆசிரியர் வழங்கினாரா என்ற கவலை, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகளுக்கு இல்லை. அவர்களை பொறுத்தவரை, மத்திய அரசு அளித்த நிதியை அவர்கள்கூறியபடி, பயிற்சி வகுப்பு நடத்தி செலவழித்து உரிய காலத்தில் கணக்கு காட்டி விட வேண்டும். எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்தினர்; மாணவர்கள் எந்த அளவுக்கு கற்றல் திறனை அடைந்தனர் என, ஜனவரியில், 500 பள்ளிகளில் தோராயமாக கணக்கெடுப்பு பணியை, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.

இந்த முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, ௮ம் வகுப்பு மாணவர்களின் திறனை சோதித்ததில், தமிழ் பாடத்தில், 75 சதவீதத்துக்கு மேல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் பட்டியலில், கன்னியாகுமரி மாவட்டம், 80 சதவீதத்துடன் முதலிடம் பெற்று உள்ளது. இந்த மாவட்டம், 20ஆண்டுகளுக்கும் மேலாக, 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாவட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பின் தங்கிய மாணவர் பட்டியலில், திருவாரூர் மாவட்டம், 25 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இங்கு படிப்போரில், 25 சதவீதம் பேர், தமிழில், 50 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றுள்ளனர். ஆங்கிலம், கணித பாடங்களில் கிருஷ்ணகிரி முன்னிலையிலும், திருவாரூர் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளன. அறிவியலில் கிருஷ்ணகிரி முன்னிலையிலும், தேனி, திருவாரூர் பின்தங்கியும் உள்ளன. 5ம் வகுப்பில் கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் தரத்தில் முன்னிலையில் உள்ளன. சேலம் மாவட்டம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் பின் தங்கிஉள்ளது.தமிழகத்தில், ஐந்து முறை முதல்வராக இருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த மாவட்டமான, திருவாரூர் மாவட்ட அரசு பள்ளிகள், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கல்வித்தரத்தில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png