!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 19 மார்ச், 2016

தேர்வில் கூடுதல்விடைத்தாளில் பதிவு எண்:'சூபர்வைசர்' எழுத கூறியதால் மாணவர்கள் விரக்தி
காரியாபட்டி;பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு அன்று கூடுதல் விடைத்தாளில் பதிவு எண்ணை 'சூபர்வைசர்' எழுத கூறியதால் மாணவர்கள் விரக்தியில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு அன்று, அறை எண் 11ல் சூபர் வைசராக பணியாற்றிய ஆசிரியை, கூடுதல் விடைத்தாளில் அவரவர் பதிவு எண்ணை எழுத கூறியுள்ளார். இதை நம்பி மாணவர்கள் எழுதி உள்ளனர். இதே போல் இரண்டாம் தாள் அன்றும் கூடுதல் விடைத்தாளில் பதிவு எண்ணை எழுதி உள்ளனர்.


இதனிடையே மாணவர்கள் எப்படி தேர்வு எழுதினார்கள் என விசாரித்து, தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ள பள்ளியில் ஆசிரியர்கள் விசாரித்துஉள்ளனர். அப்போது, பதிவு எண் எழுதியதை மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். எழுதக் கூடாது என ஆசிரியர்கள் கூறியதால் மாணவர்கள் விரக்தி அடைந்தனர்.மனஉளைச்சல்மாணவர்கள் கூறுகையில், 'தமிழ் முதல் தாள் அன்று பதிவு எண்ணை கண்டிப்பாக எழுத வேண்டும் என்றதால் எழுதினோம். அடுத்த நாளும் அதே தவறை செய்தோம். அவ்வாறு எழுதக் கூடாது என ஆசிரியர்கள் கூறியதால் மனஉளைச்சல் ஏற்பட்டு, குழப்பத்தில் உள்ளோம். இதனால் ஒன்றும் பிரச்னை இல்லை என பள்ளி ஆசிரியர்கள் தைரியம் கூறியதால், தற்போது அடுத்த தேர்வுக்கு தயாராகி வருகிறோம்,'என்றனர்.

ஆசிரியை மீது நடவடிக்கை:மாவட்ட கல்வி அதிகாரி புகழேந்தி, “கூடுதல் விடைத்தாளில் பதிவு எண், பெயர் எதுவும் எழுதக் கூடாது. எவ்வாறு தேர்வு எழுத வேண்டும் என ஏற்கனவே வகுப்பறை ஆசிரியர்கள் மூலம் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வுஅறையில் தவறான அறிவுரை வழங்கிய ஆசிரியை யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png