!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 4 மார்ச், 2016

மாணவி தலைமுடியை பிடுங்கி எறிந்த பள்ளி ஆசிரியர் மீது போலீசில் புகார்
பத்தாம் வகுப்பு மாணவியின் தலைமுடியை, கொத்தாக பிடுங்கி எறிந்தது தொடர்பாக, பள்ளி ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவியருக்கு, நேற்று முன்தினம் பிற்பகல், 3:00 மணிக்கு, தமிழாசிரியர் கணேசன், பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.


மூன்று பக்கங்கள்:அப்போது அவர், மாணவி சங்கவியை அழைத்து, தமிழ் பாடத்தின் முக்கிய கேள்வி - பதில்கள் அடங்கிய தொகுப்பில் இருந்து, மூன்று பக்கங்களை மட்டும், 'ஜெராக்ஸ்' எடுத்து வருமாறு சொன்னார்.

இதையடுத்து, பள்ளியில் இருந்து வெளியே சென்ற, மாணவி சங்கவி, தமிழ் பாடத்தின் முக்கிய கேள்வி - பதில்கள் அடங்கிய தொகுப்பில் இருந்து, அனைத்து பக்கங்களையும் ஜெராக்ஸ் எடுத்து வந்து, ஆசிரியர் கணேசனிடம் கொடுத்தார்.இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், நான் மூன்று பக்கங்களை மட்டும் தான், ஜெராக்ஸ் எடுக்க சொன்னேன். ஆனால், அனைத்து பக்கங்களையும் எடுத்து வந்திருக்கிறாயே என்று கேட்டு, சங்கவியை திட்டியதாக தெரிகிறது. பின், சங்கவியின் தலைமுடியை பிடித்து இழுத்திருக்கிறார்.

இதில், அவரது இடது முன்புறமுள்ள நெற்றியில் இருந்த தலைமுடி, கொத்தாக வந்து
விட்டது. இதனால், பயந்துபோன சங்கவி, வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். இதனால்,
பதறிப்போன ஆசிரியர் கணேசன், சங்கவி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின், இது குறித்து யாரிடம் எதுவும் சொல்லாமல், தலைமுடி இல்லாத இடத்தை மறைத்துக் கொண்டு, வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

மாலை, 6:00 மணி வரை சிறப்பு வகுப்பு இருந்ததால், அதன் பிறகு வீட்டுக்கு சென்ற சங்கவி, பள்ளியில் தனக்கு நடந்ததை பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். இதைக் கேட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணை:இதையடுத்து, சங்கவியின் தந்தை அளித்த புகாரின் படி, நாட்றம்பள்ளி போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக, திருப்பத்துார் கல்வி மாவட்ட அலுவலர் பிரியதர்ஷிணி, ஆசிரியர் கணேசன் மற்றும் மாணவிசங்கவியிடம், நேற்று விசாரணை நடத்தினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png