!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 2 மார்ச், 2016

அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி உயர்வு

ராமநாதபுரம்;பணியின்போது இறக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தை 1974 ஜன., 1 ல், அரசு செயல்படுத்தியது. இதற்காக ஊழியர்களிடம் மாதந்தோறும் ரூ.10 வசூலிக்கப்பட்டது. பணியின்போது இறந்தால், ஊழியர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 

அதன்பின் 2006 பிப்ரவரியில் ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இதற்காக மாதந்தோறும் ரூ.30 வசூலிக்கப்பட்டது.அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் 10 ஆண்டுகளுக்கு பின் பாதுகாப்பு நிதியை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அரசு உயர்த்தி உள்ளது. இதற்காக ஊதியத்தில் ரூ.60 பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு பிப்., 1 முதல் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியும் ரூ.3 லட்சமாக உயர்ந்துள்ளது.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png