!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 2 மார்ச், 2016

டி.பி.ஐ., வளாகத்தில் மீண்டும் போராட்டம்

சென்னை:ஆசிரியர் தகுதித்தேர்வான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்கக்கோரி, மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் துவக்கி உள்ளனர்.

சென்னையில், பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், பல ஆசிரியர் இயக்கங்கள் போராட்டம் நடத்தின. கடந்த இரு வாரங்களாக நடந்த இந்த போராட்டங்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் முடிவுக்கு வந்தன.

இந்நிலையில், டி.பி.ஐ., வளாகம் மீண்டும் போராட்டக் களமாக மாறியுள்ளது. இரண்டு நாள் அமைதியாக இருந்த வளாகத்தில், நேற்று அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பினர், உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

போராட்டம் குறித்து, மாற்றுத்திறனாளிகள் அமைப்பு பொருளாளர் நாகராஜன் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு, 'டெட்' தேர்வு நடத்தப்பட்டது. இதில், 1,500க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இதில், 562 பேர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டனர். மற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியும், பணி வழங்காமல், பள்ளிக்கல்வித் துறை இழுத்தடிக்கிறது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி செயலர் சபிதாவை சந்தித்து பேசினோம். ஆனாலும், எங்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கவில்லை. எனவே, எங்களுக்கு வேலை கிடைக்கும் வரை போராடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png