!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 19 மார்ச், 2016

நர்சரி பள்ளி அங்கீகாரம் புதுப்பிக்க பெண் அதிகாரி ரூ.5 லட்சம் பேரம்: வாட்ஸ் அப் ஆடியோவால் பரபரப்பு


திருச்சி கிழக்கு, மேற்கு நகரம், லால்குடி உள்ளிட்ட 8 பகுதிகளில் இருக்கும் 120 பள்ளிகள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஹேமலதா கட்டுப்பாட்டில் உள்ளன. ஹேமலதா லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், முதல்வர் ஜெயலலிதா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு பள்ளிகளின் சார்பில் புகார்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தநிலையில், ஏ.இ.இ.ஓ.ஹேமலதா ஒரு பள்ளியில் அங்கீகாரம் புதுப்பிக்க ₹5 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி உள்ளது. இது, கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.இதோ அந்த ஆடியோ விவரம்:

பள்ளி நிர்வாகி: மேடம்...

ஹேமலதா: நாளைக்கு 11 மணிக்கு அலுவலகம் வந்து ஆய்வு எழுத வரணும். யார் வருவா?பள்ளி 
நிர்வாகி: சரிங்க மேடம். எச்.எம்ம வரச்சொல்கிறேன். ஹேமலதா: அவங்களுக்கு எழுதத்தெரியுமா?பள்ளி நிர்வாகி: தெரியாது, அனுபவம் இல்லை மேடம். அவங்க புதுசு.
ஹேமலதா: தெரியாதவங்களையெல்லாம் எச்.எம்மா வச்சுருக்கீங்க. சரிங்க சார்.... ஆபீசுக்கு எதுவும் செய்யவில்லையே? பள்ளி நிர்வாகி: ரெனிவல் காப்பி வாங்கும்போது தந்துடுவேன் மேடம். அப்போது தருகிறேன்.
ஹேமலதா: இல்லைங்க சார்... இப்ப கொடுத்தாதான் வேலையே உள்ளாரா நடக்கும். நிர்வாகி: எவ்ளோ மேடம்.

ஹேமலதா: ஒரு ஆண்டுக்கு தானே? நிர்வாகி: தற்காலிகமாகதான் மேடம்.ஹேமலதா: போன முறை கொடுத்துருப்பீங்களே... சரி, ஃபைவ் கொடுங்க சார்.  
நிர்வாகி: தாளாளரை கேட்டுட்டு தர்றேன்.ஹேமலதா: டிஇஓ அடுத்தமாதம் ஓய்வு பெறுகிறார். அதற்குள் செட்டில் செய்ய வேண்டும். பிரச்னையாகாமல் இருக்கணும்னுதான் இந்த போன்ல பேசுறேன்.ஆனால், வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோவில் உள்ள குரல் தனதல்ல என்று ஏ.இ.இ.ஓ. ஹேமலதா கூறுகிறார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png