!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 27 ஏப்ரல், 2016

வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும்: 10 நகரங்களில் வெயில் சதம்


தென்கிழக்கு பகுதியில் இருந்து ஈரப்பதம் கலந்த காற்று வீசுவதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் கோடைக் காலத்துக்கான இயல்பு வெப்ப நிலை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 செவ்வாய்க்கிழமை 10 நகரங்களில் வெயில் சதமடித்துள்ளது.
 தமிழகத்தில் கடந்த 5 நாள்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வந்தது. மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதாலும், கடல் காற்று உருவாவதற்கு தாமதிப்பதாலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் தகித்தது. அதிகபட்சமாக வேலூரில் இரண்டு நாள்களுக்கு முன்பு 111 டிகிரி வெப்பம் பதிவானது.
 பகல் நேரங்களில் அனல் காற்று வீசியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டதால், புழுக்கம் அதிகரித்தது.
 வெப்பம் குறையும்: ஈரப்பதம் கலந்த காற்றின் காரணமாக தமிழகத்தின் வெப்பத்தின் அளவு தாக்கம் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:
 தெற்கு, தென்கிழக்கு பகுதியில் இருந்து ஈரப்பதம் கலந்த காற்று வீசத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும். இருப்பினும் கோடைக் காலத்துக்கு ஏற்ற இயல்பான வெப்பம் நீடிக்கும். அதாவது சராசரியாக 96 முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நீடிக்கும்.
 தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மேலும் வெப்பம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர். சென்னை, அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் வெப்பம் சற்று குறைந்து, இயல்பு நிலை நீடிக்கும். வானம் சிறிதளவு மேக மூட்டத்துடன் காணப்படும். 
 10 இடங்களில் சதம்: வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 10 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி, கரூர் பரமத்தி வேலூரில் 104 டிகிரி பதிவாகியுள்ளது. சென்னையில் கடந்த சில நாள்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவான வெப்பம் செவ்வாய்க்கிழமை 99 டிகிரியாக பதிவாகியது.
 தமிழ்நாட்டில் பதிவான வெப்பத்தின் அளவு: (ஃபாரன்ஹீட்டில்)
 தருமபுரி, கரூர் பரமத்திவேலூர் 104
 சேலம், மதுரை,
 திருப்பத்தூர், பாளையங்கோட்டை 103
 வேலூர், திருச்சி, கோவை 102
 தொண்டி 100
 


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png