பிஎப் நிதியை நிர்வகிக்கும் அறங்காவலர் குழு (சிபிடி) பரிந்துரைத்த 8.8 சதவீத வட்டியை விட இது சற்று குறைவானதாகும்.
பிஎப்ஓ அமைப்பின் உயர் நிலை அமைப்பான சிபிடி கடந்த பிப்ரவரியில் கூடி 8.8 சதவீதம் வட்டி அளிக்கலாம் என பரிந்துரைத்தது. இருப்பினும் நிதி அமைச்சகம் இந்த பரிந்துரையைத் திருத்தி 8.7 சதவீதம் அளிக்க ஒப்புதல் அளித்ததாக மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தத்தாத்ரேயா தெரிவித்தார்.

சிபிடி பரிந்துரை செய்த வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது இதுவே முதல் முறையாகும். சிபிடியின் தலைவராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013-14-ம் நிதி ஆண்டிலும் அதைத் தொடர்ந்து 2014-15-ம் நிதி ஆண்டிலும் 8.75 சதவீத வட்டி அளிக்க பரிந்துரை செய்தது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் (2012-13) அளிக்கப்பட்ட 8.5 சதவீதம் மற்றும் அதற்கு முந்தைய நிதி ஆண்டில் (2011-12 அளிக்கப்பட்ட 8.25 சதவீதத்தைக் காட்டிலும் இது அதிகமாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் கூடிய அறங்காவலர் குழு கூடியபோது வைப்பு நிதிகளுக்கு 8.95 சதவீதம் வட்டி அளித்தாலும் ரூ. 100 கோடி கூடுதலாக கைவசம் இருக்கும் என தெரிவித்திருந்தது.

பிஎப் அமைப்பு சேரும் முதலீட்டுத் தொகையை பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு அதில் கிடைக்கும் வட்டியை தனது முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கிறது.

9 சதவீத வட்டி அளிக்கவேண்டும் என தொழிலாளர் சம்மேளனங்கள் கோரிக்கை வைத்த போதிலும் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 8.8 சதவீதம் வட்டி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட தத்தாத்ரேயா 2015-16-ம் நிதி ஆண்டில் இடைக்காலமாக அறிவிக்கப்பட்ட 8.8 சதவீத வட்டி விகிதத்தை பிஎப்ஓ குறைக்காது என உறுதியளித்தார்.

நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் மற்றும் 7-வது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஆகிய காரணங்களால் வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டதாக தத்தாத்ரேயா தெரிவித்தார்.

அப்போதைய சூழலுக்கேற்ப இடைக்கால வட்டி விகித முடிவு எடுக்கப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்ட முடிவு குறித்து சிபிடி மறுபடியும் கூடிய எதிர்காலத்தில் வழங்கவேண்டிய வட்டி விகிதம் குறித்து தீர்மானிக்கும் என்று பதிலளித்தார் தத்தாத்ரேயா.