!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 13 ஏப்ரல், 2016

உயர்கல்விக்கு உதவும் நிறுவனங்கள் எவை?: பட்டியல்
பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிக்க உதவி செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, உயர்கல்வியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பல மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடம் கிடைத்தாலும், கல்விக் கட்டணம்,
விடுதி கட்டணம், பாட புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு பொருளாதார வசதி இல்லாமல், உயர்கல்வியை நிறுத்தும் நிலை உள்ளது.ஏழைமாணவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்ய, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்து உள்ளன. தெரிவதில்லைஆனால், இந்த தொண்டு நிறுவனங்களுக்கு மாணவர்களின் உண்மையான நிலை தெரிவதில்லை; உதவி தேவைப்படும் மாணவர்களுக்கும், சரியான தொண்டு நிறுவனங்கள் குறித்த தகவல் கிடைப்பதில்லை.அதனால், கல்வித்துறை அலுவலகங்களை தொண்டு நிறுவனங்கள் நாடுகின்றன. இந்த நிறுவனங்கள் குறித்த விவரங்களை பள்ளிகளில் வெளியிட, பள்ளிக்கல்வி இயக்குனர்அலுவலகத்தில் இருந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்படுகிறது. ஆனால், பெரும்பாலான முதன்மைக் கல்வி அதிகாரிகள் அல்லது பணியாளர்கள், இந்த விவரங்களை பள்ளிகளுக்கு தெரிவிப்பது இல்லை. அறிவிப்பதில்லைசில அதிகாரிகள் பள்ளிகளுக்கு தகவல் அளித்தாலும்,
அந்த பள்ளிகள் சார்பில், பொருளாதார உதவி குறித்த தகவல்களை மாணவர்களுக்கு அறிவிப்பதில்லை என, பெற்றோர் புகார் தெரிவித்துஉள்ளனர்.இந்த பிரச்னைகளை போக்க, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரக இணையதளங்களில் இந்த சுற்றறிக்கைகளை வெளியிட்டு, மாணவர்களுக்கு தகவல் அளிக்கலாம் என, பெற்றோர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png