!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 18 ஏப்ரல், 2016

உலகிலேயே அதிக வெயில் வாட்டும் நகரம் மதுரை:ஆய்வில் அதிர்ச்சி தகவல்
'உலகிலேயே அதிக வெயில் வாட்டும் இடமாக மதுரை நகர் உள்ளது,' என பல்கலை ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மார்ச் வந்தாலே வெயில் கொடுமையை தாங்க முடியாத மக்கள் பல்வேறு முன்னேற்பாடுகளை கையாள்வர். கோடை மழை கை கொடுத்தால் வெயில் கொடுமை யில் இருந்து கொஞ்சம் தப்பிக்க வாய்ப்பிருக்கும்.ஆனால், வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருவதால் பல மாவட்டங்களில், 'வெயில் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நேரம் மக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம்,' என அறிவிப்பு வெளியிடும் அளவிற்கு வெயிலின் உக்கிரம் மக்களை வாட்டி வதைக்கிறது.


இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்ன வென்றால், '2015- -16ம் ஆண்டில் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியான கார்பன் டை ஆக்ஸைடு அளவு 3.05 பி.பி.எல்., அதிகரிப்பால் உலக அளவில் ஐந்து ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெயில், மதுரை நகரை தாக்குகிறது,'
என்பதுதான்.இதன்விளைவு தான் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த மார்ச் துவக்கத்தில் 40.6 டிகிரி செல்சியஸ் வெயில் அளவு மதுரையில் பதிவாகியுள்ளது. இதன் கொடூரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புஉள்ளதாகவும் அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

ஏன் இந்த உக்கிரம் :'மதுரையில் வெளியாகும் சராசரி கார்பன் டை ஆக்ஸைடின் (சிஓ2) அளவு, உலக சராசரி அளவான 402 பி.பி.எம்.,ஐ விட 65 பி.பி.எம்., அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்,' என மதுரை காமராஜ் பல்கலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் புலம் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இப்பல்கலை புலத்தலைவரும், முன்னாள் துணை
வேந்தருமான முத்துச்செழியன் தலைமையில் உதவி பேராசிரியர் விஜயபாஸ்கர், ஆராய்ச்சி மாணவிகள் சேஷபிரியா, இந்திரா ஆகியோர் மதுரை நகரில் பெரியார் பஸ் ஸ்டாண்ட், மாட்டுத்தாவணி, அரசரடி, ஜெய்ஹிந்துபுரம், சிம்மக்கல், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.இதில், ஓராண்டில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 445 பி.பி.எம்.ல் இருந்து 490 பி.பி.எம்., ஆகவும், வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸில் இருந்து 42ஆகவும் பதிவாகியது தெரிய வந்துள்ளது. இதற்குமுக்கிய காரணம் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை தான் எனவும், இதனால் சுவாசம் தொடர்பான தொற்று மற்றும் நுரையீரல் புற்றுநோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முத்துச்செழியன் கூறியதாவது:இக்குழு எடுத்த ஆய்வு முடிவு,
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல மேலாண்மை (NOAA) அமைப்பு வெளியிடும் ஆய்வு முடிவை ஒத்துள்ளது.

மதுரையின் சராசரி வளிமண்டல கார்பன் டை ஆக்சைடின் அளவானது ஓராண்டாக தோராயமாக 469 பி.பி.எம்., என்ற அளவில் உள்ளது. இது உலக சராசரியை ஒப்பிடும் போது 65 பி.பி.எம்., அதிகமாகும். வாகனங்களில் இருந்து வெளியாகும் கரும்புகை மட்டுமின்றி, 'எல்-நினோ' என்ற பருவநிலை
மாற்றத்தால் ஏற்படும் விளைவும் முக்கிய காரணம் ஆகும்.
நாடு முழுவதும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வுகளில், வளிமண்டலத்தில் சராசரி கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 402.59 பி.பி.எம்.,ஆக அதிகரித்துள்ளது தெரியவந்துஉள்ளது. ஆனால் தொழில் புரட்சிக்கு முன் இது 270 பி.பி.எம்.,ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது, என்றார்.

தீர்வு என்ன :

நகரில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.* அதிக எண்ணிக்கையில் பசுமை தோட்டங்களை ஏற்படுத்தலாம்.காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png