!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 2 ஏப்ரல், 2016

திண்டுக்கல்லில் மோசடி:ஏமாந்த அரசு ஊழியர்கள்
திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு நகரங்களில் 'அய்யன் புரோமோட்டர்ஸ்' எனும் தனியார் நிதி நிறுவனம், அதிக வட்டி கொடுப்பதாக கூறி, அரசு ஊழியர்கள் உட்பட பொது மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னையை தலைமையிடமாக கொண்டு, இந்நிறுவனம் இயங்கிவருகிறது. இதன் கிளை நிறுவனங்கள் மதுரை, திண்டுக்கல், பழநி, விருதுநகர், சிவகாசியில் இயங்கி வருகின்றன.இந்நிறுவனத்தில் ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.8 ஆயிரம் வட்டியும், 3 ஆண்டுகள் கழித்து முதலீட்டு தொகை ரூ.ஒரு லட்சமும் திருப்பி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு தரப்பு மக்களையும் ஈர்த்தது. இதை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர்.


இந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தியவர்களில் அதிகம் பேர் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களே என்கிற உண்மை அதிர்ச்சியளிக்கிறது. பணம் செலுத்திய ஒரு சில மாதங்கள் மட்டும் ரூ.8 ஆயிரம் வட்டியாகவழங்கப்பட்டது.

அதன் பிறகு வட்டியும், அசலும் வழங்கப்படவில்லை. சில நாட்களில் நிறுவனத்தின் நிறுவனர் பல கோடி ரூபாயுடன் தலைமறைவாகி விட்டார். அதன் பின் அந்நிறுவனம் முடக்கப்பட்டது. அந்நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களில் சென்னையை சேர்ந்த 68 பேர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தனர். போலீசார் அந்நிறுவன இயக்குநர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். தேடுதல்
வேட்டையில் அந்நிறுவன இயக்குனர் வைத்தீஸ்வரன் பிடிபட்டார்.

ரூ.92 லட்சத்து 24 ஆயிரத்து 150 வரை மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும், அந்நிதி நிறுவனம் இயங்கி வந்த எல்லா ஊர்களின் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வம் கூறுகையில், “திண்டுக்கல், பழநியை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்துள்ளதாக தகவல் தெரிந்தது. ஏமாற்றப்பட்டவர்கள் உடனடியாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் நேரில் சென்றோ, தபால் மூலமோ புகார் அளிக்கலாம்'', என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png