!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 4 ஏப்ரல், 2016

'ராஜினாமா ஏற்கப்பட்டால் திரும்ப பெற முடியாது'
'அரசு அதிகாரிகளின் ராஜினாமா ஏற்கப்பட்ட பின் அதை அந்த அதிகாரிகள் திரும்பப்பெற முடியாது' என இந்திய வருவாய் சேவை அதிகாரி வழக்கில், மத்திய நிர்வாக தீர்ப்பாணையம் கூறியுள்ளது.ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் பணியாற்றிய, 2002ம் ஆண்டு இந்திய வருவாய் சேவை பெண் அதிகாரி கடந்த 2008ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். கணவருடன் ஏற்பட்டுள்ள பிரச்னை மற்றும் உடல்நிலை சரியில்லாததால் ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் கணவரை பிரிந்து வாழ்வதால் தன் குழந்தைகளின் படிப்பு மற்றும் மருத்துவ செலவுக்கே பணம் இல்லாததால், மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் வேலை அளிக்க வேண்டும் என 2011ல் அந்த பெண் கோரிக்கை விடுத்தார்.ஆனால், 'மத்திய அரசு பணியாளர் நலன், பயிற்சி துறையின் விதிகளின்படி ராஜினாமா செய்ததில் இருந்து 90 நாட்களுக்குள் அதை திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்க முடியாது' என மத்திய
நிர்வாக தீர்ப்பாயம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png