!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 20 ஏப்ரல், 2016

ஆசிரியர்களுக்கு இயக்குனரகம் தடை
விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தடை விதித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 15ம் தேதி துவங்கி, ஏப்., 13ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 2,000 ஆசிரியர்கள் வரை பணியில் ஈடுபடுவர். ஆசிரியர் சங்கங்கள், தங்களின் சாதனை, கோரிக்கை குறித்த, 'நோட்டீஸ்' வழங்கி, காலை நேரத்தில் வாயிற்கூட்டம் நடத்துவது வழக்கம். தற்போது வாயிற்கூட்டம் நடத்துவதற்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தடை விதித்துள்ளார்.உத்தரவில், அவர் கூறியிருப்பதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாயிற்கூட்டங்களில், கட்சிகளுக்கு ஆதரவு நிலை குறித்து பேசும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, இது தவறாகும். வாயிற்கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png