!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 21 ஏப்ரல், 2016

மாணவர்களின் புத்தக பை சுமையை குறைக்க வேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. ஆலோசனை
மத்திய பள்ளி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. மாணவர்கள் அட்டவணைப்படி உள்ள புத்தகங்களை மட்டுமே கொண்டுவர வேண்டும். பெரிய மேற்கோள் புத்தகங்கள், அகராதிகள், இதர பொருட்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். அத்தகைய புத்தகங்கள், சீருடைகள், விளையாட்டு கருவிகள் போன்றவைகளை வைப்பதற்காக வகுப்பறைகளில் பாதுகாப்பு அடுக்கு அறைகள் (ரேக்) மற்றும் நூலகங்கள் அமைக்கலாம்.


சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட புத்தக பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். அதிக சுமை உள்ள புத்தக பைகளை சுமப்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டும். பள்ளி பாடத்திட்டம் அதிக செயல் நடவடிக்கைகளை கொண்டதாக இருக்க வேண்டும். தலைசுற்றும் அளவுக்கு அதிகளவு வீட்டு பாடங்களை கொடுக்கக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளை பள்ளி தலைமை மற்றும் மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png