!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 30 மே, 2016

பீஹார் 10ம் வகுப்பு தேர்வில்

:தேர்வு முறைகேடுகளுக்கு பெயர் பெற்ற பீஹார் மாநிலத்தில், இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது; அதே நேரத்தில், மாணவியரை விட, மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் இணைந்த, கூட்டணி அரசு உள்ளது. இங்கு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, அவர்களுக்கு பெற்றோரே உதவுவது என, பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கம்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வின் போது, பல்வேறு கட்டுப்
பாடுகளை மாநில அரசு எடுத்தது. மாநில கல்வி வாரியத்தின், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் தேர்வு எழுதிய, 15.47 

லட்சம் பேரில், 46.66 சதவீதம் பேரே தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு, 75.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், 54.44 சதவீத மாணவர்களும், 37.61 சதவீத மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். 

இந்த தேர்வு முடிவுகள், மாணவர்களின் உண்மையான திறமையை வெளிப்படுத்துகின்றன. மாநிலத்தின் கல்வி முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களையும் இந்த தேர்ச்சி விகிதம் சுட்டிக்காட்டுகிறது.அசோக் சவுத்ரி பீஹார் கல்வி அமைச்சர்


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png