!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 30 மே, 2016

தமிழக அமைச்சரவையில் பிளஸ் 2 தாண்டாத 15 பேர்
தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில், முதல்வரையும் சேர்த்து, 33 அமைச்சர்களில், 15 பேர், பிளஸ் 2 படிப்பை தாண்டவில்லை.
அறிக்கையாகசட்டசபை தேர்தலின் போது, வேட்பு மனுக்களுடன் இவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த, தமிழ்நாடு எலெக் ஷன் வாட்ச், ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள், இந்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டு ள்ளன. 
அதில் கூறியுள்ளதாவது:தமிழக சட்டசபையில், மொத்தம் உள்ள, 33 அமைச்சர்களில், 18 பேர் பட்டப்படிப்பும், பட்டமேற்படிப்பும் படித்துள்ளனர். இவர்களில், ஆறு பேர் பட்டப்படிப்பும், எட்டு பேர் முதுகலை பட்டப்படிப்பும், நான்கு பேர் தொழிற்கல்வி பட்டப்படிப்பையும் முடித்துள்ளனர்.அதேநேரத்தில், 15 பேர், பிளஸ் 2; அதற்கு குறைவாகவே படித்துள்ளனர். இவர்களில், ஒருவர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்துள்ளார். ஏழு பேர், பத்தாம் வகுப்பு; ஏழு பேர், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளனர். 
கோடீஸ்வர மந்திரிகள்:அமைச்சர்களில், ஒன்பது பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், நான்கு பேருக்கு எதிராக தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. அமைச்சரவையில், 26 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதிகபட்சமாக, 113.73 கோடி ரூபாய்சொத்துகளுடன், முதல்வர் ஜெயலலிதா முதல் இடத்திலும், வணிகவரித் துறை அமைச்சர் வீரமணி, 27.67 கோடி ரூபாய் சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும், கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, 25 கோடி ரூபாய் சொத்துகளுடன் மூன்றாம் இடத்தையும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின், 23.02 கோடி ரூபாய் சொத்து களுடன் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மிகக்குறைவான சொத்துகளை வைத்திருப்பவர், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார். இவருக்கு, 31.75 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே சொத்துகள் உள்ளன. அமைச்சரவையில், 20 பேர், 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 25 முதல், 40 வயதுக்குட்பட்டவர்கள், ஒன்பது பேர் மட்டுமே உள்ளனர். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png