!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 18 மே, 2016

விரைவான இணையதள சேவை:  மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு உறுதுணையாகத் தேர்வுத் துறையின் இணையதள சேவை விரைவாகச் செயல்பட்டதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 கடந்த 10 ஆண்டுகளாக அரசுத் தேர்வுகள் துறை சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், பள்ளிகளில் மட்டுமின்றி இணையதளத்திலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
 இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்திலும், அனைத்து மாவட்ட மைய, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக இணையதளத்தில் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டது. எனினும், தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்வதற்காக ஓரிரு இணையதள முகவரியைப் பயன்படுத்துவதால், மதிப்பெண் பட்டியலைப் பெறுவதற்கு நீண்ட நேரம் ஆகும் நிலை இருந்து வந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் தேர்வுத்துறை சார்பில், மாணவ-மாணவிகள், தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள 3 இணையதள முகவரிகள் வழங்கப்பட்டன.
 இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், இந்த ஆண்டு இணையதள சேவை விரைவாக இருந்ததால், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை
மாணவர்கள் எளி தாக தெரிந்து கொள்ள முடிந்தது என்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png