!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 23 மே, 2016

வெயில் "ஓவர்"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை!

சென்னை பள்ளிகளை திறப்பதை தள்ளி வைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்,


கோடை விடுமுறை முடிந்து ஜுன் 1-ந் தேதி முதல் பள்ளிக்கள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.


இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிய ஒரு வார காலமே உள்ள நிலையில் இன்றும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.



பல மாவட்டங்களில் தொடர் சதம் அடித்து வருகிறது வெயில். இந்நிலையில், வெயிலும் தாக்கத்தை குறைப்பது போல கடந்த வாரம் 2 நாட்கள் பெய்த மழை ஓரளவிற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனாலும், அடுத்த நாள் முதலே வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது.



கடுமையான வெயிலின் காரணமாக, குழந்தைகளுக்கு சரும நோய்கள் ஏற்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பொதுவான கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச்சங்க மாநில தலைவர் அருமைநாயகம் கூறுகையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயில் அதிகமாக உள்ளது. ஜுன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை 10 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.



பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ஜுன் 1-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இது தெடர்பாக அரசுதான் அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png