!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 17 மே, 2016

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை: அருண் ஜெட்லி

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்
டெல்லியில் நிதி மந்திரி அருண்ஜெட்லி பெண் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தான் குறிப்பிட்ட எந்த விஷயம் குறித்தும் பேசப்போவதில்லை என்றும், அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினையை மட்டுமே பேசுவேன் எனவும் குறிப்பிட்டார்.

நீதித்துறை பற்றிய ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ‘‘நீதித்துறை தனக்கென ஒரு லட்சுமண ரேகையை வைத்துக் கொள்ளவேண்டும். கொள்கைகளை நிறைவேற்றக் கூடிய நடவடிக்கைகளில் நீதித்துறை முடிவு செய்யக் கூடாது. சீர்திருத்த செயல்பாடுகள் குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். இந்த இரண்டும் சம அளவில் இருப்பதுதான் சிறந்தது’’ என்றார்.
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு பற்றிய மற்றொரு கேள்விக்கு அவர் கூறியதாவது:-
சில மாநிலங்களில் கல்வி வாரியங்கள் சமமாக இருப்பதில்லை. அவர்கள் மொழியும் வெவ்வேறாக உள்ளன. இவர்களை ஒரே பொதுத் தேர்வு என்ற அடிப்படையில் முடிவு செய்து தரம் என்ற ஒன்றை மட்டுமே எழுப்பி தேர்வை எழுதுமாறு கூற முடியுமா?
இதைத்தான் நாங்கள் இந்த அதிகாரம் ஆட்சி அதிகார எல்லைக்கு உட்பட்டது என்கிறோம். ஆனால் தற்போது இதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எனவே இப்போது இதில் கையாளும் முறையை நாங்கள் காணவேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
எது எப்படி ஆனபோதிலும், தேர்வுகளை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது என்பதில் நீதித்துறையும், ஆட்சி அதிகாரமும் ஒரே பக்கத்தில் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png