!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 13 ஜூன், 2016

பணி நிரந்தரம் கோரி கடிதம் அனுப்பும் போராட்டம்
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, 1.65 லட்சம் கடிதம் அனுப்பி போராட்டம் நடத்த, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், 2012ல், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கணினி அறிவியல் என, பல பாடங்களுக்கு, 16 ஆயிரத்து, 549 பேர் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் பணி நிரந்தரம் கோரி, கடந்த ஆட்சியில் பல கட்ட போராட்டம் நடத்தினர்.


இந்நிலையில், தேர்தலுக்கு பின் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைத்துள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும், பிரதமர் மோடி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, முதல்வர் ஜெயலலிதா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், செயலர் சபிதா உள்ளிட்ட, 10 பேருக்கு, தலா ஒவ்வொரு கடிதம் என, 1.65 லட்சம் கடிதங்கள் எழுதி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png