!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 6 ஜூன், 2016

தமிழகத்தில் 6,000 பள்ளிகளில் இலவச யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில், 6,000 பள்ளிகளில், மாணவர்களுக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.


இதுகுறித்து, அவர் கூறியதாவது:உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் யோகா உதவியாக உள்ளது. எனவே, பள்ளிகள் அளவில் யோகா கற்றுக் கொடுக்க முடிவு செய்தோம்.
30 ஆயிரம் பள்ளிகளில், 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, யோகா பயிற்சி கொடுத்துள்ளோம். அவர்கள், மாணவர்களுக்கு எளிமையான, 'உப யோகா' பயிற்சியை அளிக்கின்றனர்.தமிழகத்தில், 11 ஆயிரத்து, 500 தன்னார்வ யோகா ஆசிரியர்கள் மூலம், 6,000 பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் பொது நிறுவனங்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பணிபுரிவோருக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சென்னையில் இதுவரை, 4,500 தன்னார்வ தொண்டர்களுக்கு, யோகா ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றோர், சென்னை மக்களுக்கு, இம்மாதம் முழுவதும் இலவச யோகா பயிற்சி அளிக்க உள்ளனர். இலவச யோகா கற்றுக்கொள்ள, 83000 11000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png