!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 14 ஜூன், 2016

மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்துக்கு 'தடை'களம்! அரசு பள்ளிகளில் அடிப்படை தேவைகள் இல்லை
கோவை மாவட்டத்தில் செயல்படும், 70 சதவீத அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி பிரிவுக்கான, அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால் மாணவர்களின் ஆர்வத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.



உடற்கல்வி என்ற பிரிவில், பள்ளி மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், பேட்மிட்டன், சதுரங்கம், செஸ், நீச்சல், ஸ்குவாஷ், டேக்வாண்டோ, வாள்சண்டை, ஹாக்கி, கோ-கோ, கபடி உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

ஆனால், பள்ளி நேரத்தில் உடற்கல்வி பாட வேளையில் மாணவர்கள் விளையாட தேவையான அடிப்படை உபகரணங்கள் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். சாதாரணமாக இருக்கவேண்டிய, ஸ்கிப்பிங் கயிறு, சதுரங்க பலகை, கைப்பந்து, தடகள ஓட்டத்துக்கு தேவையான பட்டன் உள்ளிட்ட அடிப்படை சாதனங்கள் கூட, கோவை மாவட்டத்தில், 70 சதவீத உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இல்லை.

விளையாட்டு பிரிவுக்கு என, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, ஏழு ரூபாய் வீதமும், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 14 ரூபாய் வீதமும், பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு, 21 ரூபாய் வீதமும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு தக்கபடி அரசு நிதி வழங்குகிறது.

இந்நிதி, விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மாணவர்களை விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பவுமே போதுமானதாக இல்லை என, தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான பள்ளிகளில், மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, சொற்ப அளவில் இருப்பதால், இந்நிதியால் பயனேதும் இல்லை. சில பள்ளிகளில் மைதானங்களே இல்லை. இதுபோன்ற காரணங்களால், ஆர்வம் இருந்தும் அரசு பள்ளி மாணவர்களின் திறமை முடக்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டிகளிலும் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பு சொற்பமாக இருப்பதும், பங்கேற்கும் மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களை சமாளிக்க முடியாமல் திணறுவதற்கும் இதுவே காரணம்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கு, பள்ளி மானியம், பராமரிப்பு மானியம், புத்தகம் - நாளிதழ் செலவினம், ஆய்வக பொருட்கள் என, 75 ஆயிரம் ரூபாய் வரை நிதி வழங்கப்படுகிறது. அதுபோன்று, விளையாட்டு உபகரணங்களை வாங்கவும் நிதி ஒதுக்கவேண்டியது கட்டாயம்.
கால்பந்து பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு ஆர்வலர் ராஜராஜன் கூறுகையில், ''தமிழக அரசு விளையாட்டு துறையில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு கோடி கோடியாக பரிசுகளை அறிவிக்கிறது. ஆனால், வளரும் சாதனையாளர்களை உருவாக்குவதில்லை. மாநில, மாவட்ட அளவில் தனியார் கிளப், ஒரு சில தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களே தொடர்ந்து வெற்றி பெறுகின்றனர்.

''அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பும், வெற்றியும் மிக குறைவு. இதற்கு காரணமாக, போதிய பயிற்சி, மைதானம், ஆசிரியர் என, எவ்வித வசதியும் இல்லை. தமிழகத்தில், 183 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர்கள் கூட இல்லை. ''கோவையில், 70 சதவீத அரசு பள்ளிகளில் அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் கூட இல்லை,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png