!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 23 ஜூன், 2016

பழநியில் 85 பவுன் நகையுடன் சுற்றித் திரிந்த தலைமை ஆசிரியை மகனிடம் ஒப்படைப்பு
வீட்டில் கோபித்துகொண்டு 85 பவுன் நகை, பணத்துடன் பழநி வந்த திருச்சி உறையூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியையை போலீசார் மீட்டு மகனிடம் ஒப்படைத்தனர். பழநி அடிவாரம் எஸ்.ஐ.,நாதன் தலைமை யிலான குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு ரோந்து சென்றனர். அருள்ஜோதி வீதியில் தனியார் கல்யாண மண்டபம் அருகே மூதாட்டி ஒருவர் படுத்திருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது துணிப் பையில் நிறைய தங்கநகைகள், பணம் வைத்திருந்தார். முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை செய்தனர்.


இதில், திருச்சி மாவட்டம் சிக்கந்தம்பூரை சேர்ந்த சுப்பிரமணி மனைவி தனம்,66, என்றும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை எனவும் தெரியவந்தது. இவருக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் கோபித்துக் கொண்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நகை, பணத்துடன் ஆசிரியை தனம் பழநிக்கு வந்தது தெரிந்தது. போலீசார் அவரது மகன் சுரேஷ்பாபுவை பழநிக்கு வரவழைத்து தனம் வைத்திருந்த 85 பவுன் நகை மற்றும் ரூ.40ஆயிரம் பணத்தை ஒப்படைத்தனர். அதிக நகை, பணத்துடன் பாதுகாப்பு இல்லாமல் வரக் கூடாது என தனத்தை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர். பழநியில் சிலநாட்களுக்கு முன்காரில் வந்த இரண்டு பெண்களிடம் முகவரி கேட்பது போலவும், பணத்தை கீழே போட்டும் நூதனமுறையில் தலா 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பழநியில் நகை, பணத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், 85 பவுன் நகையுடன் ஆதரவின்றி சுற்றித் திரிந்த தனத்தை போலீசார் மீட்டதால் நகையும், அவரும் திருடர்களிடம் இருந்து தப்பியுள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png