!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 12 ஜூன், 2016

அரியானாவில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய தடை பாஜ அரசு அதிரடி 




அரியானாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய கட்டார் தலைமையிலான பாஜ அரசு தடை விதித்துள்ளது.பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவ்வப்போது உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சர்ச்சை ஏற்படுவது வழக்கம். தற்போது மாணவர்களைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜ அரசு மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரியானா பள்ளி கல்வி இயக்குனரகம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், ஆசிரியர்கள் யாரும் ஜீன்ஸ் அணிய கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. 

ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் ஜீன்ஸ் அணிந்து வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததும் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பள்ளி கல்வி கூடுதல் செயலாளர் பி கே தாஸ் கூறுகையில், மாணவர்களை ஒழுங்காக, முறையாக உடை அணிந்து வாருங்கள்  என்று ஆசிரியர்கள் கட்டுப்பாடு விதித்து வருகின்றனர். அதற்கு முன்னதாக மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். 

அப்போதுதான் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறும் அறிவுரை சென்று சேரும். எனவே ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் ஒரே நேரத்தில் எதிர்ப்பும் ஆதரவும் நிலவி வருகிறது. அரியானா முதல்வர் கட்டார் அரசு துக்ளக் ஆட்சி போல் நடைபெற்று வருகிறது., ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிவதால் என்ன நடக்கப் போகிது என பள்ளி கல்வி ஆசிரியர்கள் சங்க தலைவர் வினோத் தாக்ரன் குற்றம் சாட்டியுள்ளார். பள்ளிகளில் ஏராளமான காலியிடங்கள் இருப்பதால் வேலைப்பளுவால் ஆசிரியர் சமூகம் அவதிப்பட்டு வரும் வேளையில், அதை செய்ய முன்வராத அரியானா அரசு, தேவையில்லாமல் இது போன்ற உத்தரவுகள் மூலம் ஆசிரியர்கள் மத்தியில் பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png