!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 4 ஜூன், 2016

அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்க அழைப்பு ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் நிதியுதவி

திருச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் தமிழகத்தில் சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி படிக்கும் உதவி திட்டத்தில் பயன் பெறலாம் என திருச்சி கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த 3 மாணவர், 3 மாணவியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர், 2 மாணவியர் என 10 பேரை தேர்வு செய்து, அவர்கள் விரும்பும் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் உதவி பெற விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு உயர்ந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல் 2 ஆண்டுகளுக்கு ரூ.56 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், தகுதியுடைய மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தின் 2வது தளத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png