!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 22 ஜூன், 2016

ஆபாசமாக பேசிய ஆசிரியர்களுக்கு கண்டிப்பு : மன்னிப்பு கோரி மாணவ, மாணவியர் போராட்டம்
தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில், மாணவியரை, ஆபாசமாக பேசிய ஆசிரியர்களை கண்டித்து, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் சாலையில் உள்ள, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகம், நாமக்கல்லில் இருந்து தனியார் பள்ளி ஆசிரியர்களை அழைத்து வந்து, 'தஞ்சையில் நாமக்கல் கல்வி முறை' என விளம்பரம் செய்தனர். இதையடுத்து, அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது. மாணவர் சேர்க்கை அதிகரித்த பின், நாமக்கல் ஆசிரியர்களை, பள்ளி நிர்வாகம் அடித்து விரட்டியது.


வாக்குறுதி : பள்ளி நிர்வாகத்தின் செயலை கண்டித்து, நேற்று முன்தினம், மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நாமக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆசிரியர்கள் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என, பள்ளி நிர்வாகம் வாக்குறுதி அளித்ததால், மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து, நேற்று வழக்கம் போல், வகுப்புகள் துவங்கின. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரை, ஆசிரியர்கள் சிலர் ஆபாசமாக திட்டியதாக, கூறப்படுகிறது. ஆசிரியர்களின் இந்த செயலை கண்டித்து, மாணவ, மாணவியர், பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியாக அழைத்து : இந்த தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி முன் கூடி, அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியரை ஆபாசமாக திட்டிய ஆசிரியர்கள் மீது நவடிக்கை எடுக்க கோரியும், அவர்கள் மாணவ, மாணவியரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியும், கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, போலீசார் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர், பள்ளிக்கு விரைந்தனர். அவர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சு நடத்தி, ஆபாசமாக பேசிய ஆசிரியர்களை தனியாக அழைத்துச் சென்று, மாணவ, மாணவியரிடம் மன்னிப்புக் கேட்க வைத்தனர். இதையடுத்து, மாணவர்கள், பெற்றோர் தங்கள்
போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், 'நாமக்கல் கல்வி முறை' என்ற விளம்பரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் புகார் தெரிவித்து

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png