!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 22 ஜூன், 2016

அரசு பள்ளி, கல்லூரிகளில் யோகா நிகழ்ச்சிகள் இல்லை
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் அதிகாரப்பூர்வ யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகளில், யோகா தினம் கடை
பிடிக்கப்பட்டது. மத்திய அரசு, யோகா எனும் பாரம்பரிய உடற்பயிற்சியை, இந்திய கலாசார நிகழ்வாகவும், சர்வதேச அளவில் பிரபலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது. 


இதன் பலனாக, ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21ல், சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என, ஐ.நா., சபை அறிவித்தது. இரண்டாம் ஆண்டாக, நேற்று யோகா தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. இதற்காக, பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடந்தன. ஆனால், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் யோகா தினம் கொண்டாடப்படவில்லை.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளிக் கல்வி செயலகத்தில் இருந்து, யோகா நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று, எந்த அறிவிப்பும் வரவில்லை. தமிழகத்தில், தினமும் அரசு பள்ளிகளில், 20 நிமிடங்கள் யோகா வகுப்பு அமலில் உள்ளதால், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவில்லை' என்றனர். அதேநேரம், அரசு அறிவிக்காதபோதும், தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png