பிளஸ் 1 புத்தகம் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு
பிளஸ் 1 புத்தகங்கள் வாங்க, பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தில், பெற்றோர் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்புகள், அரசு பள்ளிகளில், ஜூன் 23ம் தேதியும்; தனியார் பள்ளிகளில், ஜூன் முதல் வாரத்திலும் துவங்கின. அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. பொருளியல் பிரிவு பாட புத்தகங்கள் மட்டும் இருப்பு இல்லாததால், கடந்த வாரம் வழங்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், பெற்றோரை புத்தகம் வாங்கும்படி அறிவுறுத்தி உள்ளன. தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர், கடைகளில் புத்தகம் கிடைக்காமல், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், விற்பனை மையங்களுக்கு வாங்க வருகின்றனர். ஆனால், புத்தக விற்பனை மையங்களில் கூடுதல் ஆட்களை நியமிக்காததால், பெற்றோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதிலும், பல புத்தகங்கள் இருப்பு இல்லாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து, எத்தனை முறை புகார் அளித்தாலும், பாடநுால் கழக அதிகாரிகள் அலட்சியமாகவே உள்ளதாக, பெற்றோர் குமுறுகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.