!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 19 ஜூலை, 2016

பிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டம் : நான்கு ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'
பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில், ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பான புகாரில், இரண்டு தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது சென்னையில் இருந்து இணை இயக்குனர்கள், மாவட்ட வாரியாக பொறுப்பாளராக நியமிக்கப் பட்டனர். மேலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட பொதுத்தேர்வுக்கான அதிகாரியாகவும் நிர்ணயிக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளின் போது, சென்னையில் இருந்து சென்ற பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் குழு, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் தேர்வு அறைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. இதில், பள்ளி தேர்வு மையங்களில், ஐந்து மாணவர்களின் விடைத்தாள்களில், ஒரே மாதிரியான கையெழுத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விடைத்தாள்கள் தனியாக எடுத்து வைக்கப்பட்டு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி மற்றும் இணை இயக்குனர் உமா ஆகியோர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. வேதியியல் விடைத்தாளில், ஒரு மதிப்பெண்ணுக்கான, 30 வினாக்களின் பதில்களை, ஒரே நபர் ஆள் மாறாட்டம் செய்து எழுதியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த விடைத்தாள்களின் பிரதிகள், சென்னையில் உள்ள தமிழக தடயவியல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு கையெழுத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அத்துடன் கையெழுத்து நிபுணர்களும் ஆய்வு செய்ததில், ஐந்து விடைத்தாள்களில் உள்ள கையெழுத்து, ஒரே நபருடையது என தெரியவந்தது. அந்த நபர் ஆசிரியரா; தேர்வு மைய அதிகாரியா; தேர்வு அறை கண்காணிப்பாளரா; மாணவரா என விசாரணை நடந்து வருகிறது.


இந்த பிரச்னை குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அய்யணன்
விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதன்படி, நான்கு ஆசிரியர்கள்
மீது நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, இரண்டு தலைமை ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். ஈரோடு, மாத்துார் அரசு மாடல் (முன் மாதிரி) மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எல்.நசீர்; டி.ஜி.புதுார், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சகாயராஜ்; பவானி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உயிரியல் ஆசிரியர் முருகன், இயற்பியல் முதுநிலை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png