!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 3 ஜூலை, 2016

திருச்சியில் போலி பல்கலையாம்! : 6ம் ஆண்டாக யு.ஜி.சி., அறிவிப்பு
திருச்சியில், போலி சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்படுவதாக, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., ஆறாம் ஆண்டாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலும், போலி பல்கலைக்கழகங்களை கண்டறிந்து, அதன் பட்டியலை யு.ஜி.சி., வெளியிடும். இந்த ஆண்டு, 22 போலி பல்கலைகளின் பட்டியலை யு.ஜி.சி., வெளியிட்டு உள்ளது. இவற்றின் மீது, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. போலி பல்கலைகளுக்கு, யு.ஜி.சி.,யில் இருந்து எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அவை முகவரி மாற்றத்தால், திரும்பி வந்துள்ளன. எனவே, அந்தப் போலி பல்கலைகள் வேறு முகவரியில் செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்தப் பட்டியலில், உத்தர பிரதேசத்தில், எட்டு; டில்லியில், ஆறு; கோல்கட்டாவில், இரண்டு; பீஹார், கர்நாடகா, கேரளா, தமிழகம், மஹாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில், தலா, ஒரு பல்கலை செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், திருச்சி புதுாரில் டி.டி.பி., சமஸ்கிருத பல்கலை உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆறு ஆண்டுகளாக, யு.ஜி.சி., இந்த அறிவிப்பையும், இந்த பட்டியலையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஆனால், திருச்சியில் போலி பல்கலை செயல்படுகிறதா? அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png