தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரிக்கை
'உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை தர ஊக்க ஊதியம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் என, ஊதிய உயர்வுகள் வழங்கப்படுகின்றன. உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அரசாணை : இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங் களின் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன் கூறியதாவது: தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, ஓய்வூதியம் பெறுவதற்கான காலமாக கணக்கிட இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை; ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், பதவி உயர்வு அல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம் வழங்க, பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
நேரில் மனு : இதேபோல், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு தேர்வு நிலை தர ஊதியம் வழங்குவது குறித்து, தெளிவுரை வழங்க வேண்டும்.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் வேறு பாடங்களில் உயர்கல்வி முடித்தால், அதற்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமினை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.