!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 30 டிசம்பர், 2010

ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த விரைவில் நடவடிக்கை:

ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த விரைவில் நடவடிக்கை: தென்னரசு - 29-12-2010
சென்னை: ""இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளச் சலுகை குறித்து, முதல்வருடன் ஆலோசனை நடத்தியபின் அறிவிக்கப் படும்,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:
தி.மு.., அரசு, ஆசிரியர்களுக்கு சலுகை, சம்பளம் வழங்குவதில் எந்தவித குறையும் வைத்ததில்லை. தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய வேண்டும் என்று அரசு கருதுகிறது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக, உடனடியாக செய்ய இயலாத நிலை உள்ளது. எனினும், நிதித்துறையையும், முதல்வரையும் கலந்து ஆலோசித்து, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு வழிவகை செய்யும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை அனுப்பும் முறையில் மாற்றம் - 29-12-2010
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், பாடப் புத்தகங்களை வினியோகிப்பதில் தபால் துறை பல்வேறு குளறுபடிகளை செய்ததையடுத்து, வரும்  கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை மூலம் நேரடியாக பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் வினியோகம்  செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு,  தமிழக அரசு இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்கி வருகிறது. ஒன்று முதல் பிளஸ் 2 வரை, எட்டு கோடி பாடப் புத்தகங்கள் இலவசமாக  வழங்கப்படுகின்றன.

முதலில், அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள், மாநிலம் முழுவதும் பாடநூல் கழகத்திற்கு சொந்தமாக உள்ள குடோன்களுக்கு அனுப்பப்பட்டன.  பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்களை, குடோன்களில் இருந்து எடுத்துச் சென்றனர்.

இதில், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்ததால், மாணவர்களுக்கு உடனுக்குடன் பாடப் புத்தகங்களை வழங்க முடியாத  நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டில் தபால் துறை மூலம், நேரடியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டன.  இதற்காக, ஒன்றரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.


எனினும், பாடப் புத்தகங்களை வினியோகம் செய்ததில், தபால் துறை ஊழியர்கள் பல்வேறு குளறுபடிகளை செய்ததாக, கல்வித்துறை  வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிகளுக்கு பகலில் செல்லாமல், நள்ளிரவில் சென்று பாடப் புத்தக கட்டுகளை இறக்குவதற்கு பள்ளி நிர்வாகமே நடவடிக்கை எடுக்குமாறு  தொந்தரவு செய்துள்ளனர். இதனால், புத்தகங்களை இறக்குவதற்கு இரவில் ஆள் கிடைக்காமல், தலைமை ஆசிரியர்கள் திண்டாடியுள்ளனர்.

இதனால், பள்ளிக்கு அருகில் உள்ள ஆசிரியர்களே, பாடப் புத்தக கட்டுகளை இறக்கியுள்ளனர். தபால் துறை ஊழியர்கள் இறக்கினால், அதற்கு  பணம் கேட்டு தலைமை ஆசிரியர்களிடம் அடாவடி செய்த தகவலும், பள்ளிக் கல்வித் துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், வரும் கல்வியாண்டுக்கு பாடப் புத்தகங்களை வினியோகம் செய்ய, தபால் துறை கூடுதல் கட்டணம் கேட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் அதிகளவில் குளறுபடிகள் நடந்ததும், அதைத் தொடர்ந்து கூடுதல் கட்டணம் நிர்ணயித்ததாலும், தபால் துறை  மூலம், பாடப் புத்தகங்கள் அனுப்பும் திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை ரத்து செய்துள்ளது.

வரும் கல்வியாண்டில் இருந்து, மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து புத்தகங்களை அனுப்ப, பள்ளிக் கல்வித்துறை  முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் அரசாணையில் கூறியிருப்பதாவது: பாடநூல் கழகத்தில் இருந்து, தபால் துறை மூலம் பாடப் புத்தகங்களை அனுப்புவதால் மூன்று மடங்கு செலவு அதிகரிப்பதுடன், பல்வேறு  இடர்பாடுகள், சிரமங்கள் இருப்பதாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், அரசுக்கு தெரிவித்துள்ளார்.

எனவே, தபால் துறை மூலம் பாடப் புத்தகங்கள் அனுப்பும் திட்டத்தை ரத்து செய்து, முந்தைய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட முறையை  பின்பற்றியே, பாடப் புத்தகங்களை அனுப்பலாம் என்றும், இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன்படி, இலவச பாடப் புத்தகங்களை, பாடநூல் கழக வட்டார கிடங்குகளில் இருந்து, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு (65 கல்வி  மாவட்டங்கள்) கொண்டு செல்லும் பொறுப்பை, பாடநூல் கழகம் மேற்கொள்ளும்.

மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை வினியோகம் செய்யும் பொறுப்பை, பள்ளிக்  கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பது என்றும், இதற்கு ஆகக்கூடிய செலவை, மாவட்ட கலெக்டர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ள  போக்குவரத்து கட்டணங்களுக்கு உட்பட்டு, பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறைக்கு முதலில் பாடநூல் கழகம் வழங்கும்.

பின்னர், அத்தொகையை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர், அரசிடம் இருந்து பெற்று, பாடநூல்  கழகத்திற்கு வழங்குவர். 201112ம் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள், இந்த முறையின் படி வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி-கல்விமலர்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png