புது தில்லி, டிச. 31: ஓய்வுபெறும் வயதை நிர்ணயம் செய்வது அரசின் தனிப்பட்ட முடிவு, இதில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது குறித்த விவரம்: உத்தரப் பிரதேசத்தில் அரசு வழக்கறிஞர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 60 ஆகக் குறைத்து அந்த மாநில அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதில் அரசு வழக்கறிஞர்கள் ஓய்வு பெறுவதை மீண்டும் 62 வயதுக்கு கொண்டுவர வேண்டுமென மாயாவதி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.எம். பஞ்சால், தீபக் வர்மா, பி.செüகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
அதில், "அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை நிர்ணயிப்பது அரசின் தனிப்பட்ட விஷயம். அரசியல்சாசனத்துக்கு மாறாக அரசு ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டால் அதில் நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது' என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.