சென்னை: பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 2ம் தேதி தொடங்கியது. 25ம் தேதியுடன் முடிகிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும். கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த அடுத்த நாளே பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் நடப்பதால் பிளஸ் 2 விடைத்தாளை முன்னதாக திருத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, பிளஸ் 2 தேர்வுகள் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போதே தமிழ், ஆங்கில பாடங்களுக்கான விடைத்தாள்களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு தலா 2 தாள்கள் உள்ளன. மேலும் இந்த இரண்டு மொழிப் பாடங்களைத்தான் அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும். இதனால் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவியரின் விடைத்தாள்களை திருத்த காலஅவகாசம் தேவைப்படும். இதனால் மேற்கண்ட விடைத்தாள்கள் மட்டும் முன்னதாகவே திருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் பாடங்களான இயற்பியல், விலங்கியல், தாவரவியல், உயிரியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள்களுக்கு டம்மி எண் போடப்பட்டு திருத்தப்படும். மற்ற பாடங்களுக்கு டம்மி எண்கள் கிடையாது. டம்மி எண்கள் போடுவதற்கு ஒரு வாரம் ஆகும். அதற்கு பிறகுதான் அந்த பாடங்களின் விடைத்தாள் திருத்தத் தொடங்குவார்கள். இதனால் தமிழ், ஆங்கிலம் பாடங்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 5ம் தேதி முதல் திருத்தத் தொடங்குவார்கள். ஏப்ரல் 20ம் தேதி திருத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வு: உச்சநீதிமன்றம் உத்தரவு புதுதில்லி, மார்ச்.7: இந்த கல்வி ஆண்டில் இருந்து எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தக் கோரி இந்திய மருத்துவக் கவுன்சில் தாக்கல் செய்திருந்த மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. |
.
திங்கள், 7 மார்ச், 2011
பிளஸ் 2 விடைத் தாள்கள் விரைவில் திருத்தம் - 07-03-2011
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.