!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 10 மார்ச், 2011

ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெறும் பள்ளிகள் அருகே தேர்தல் பிரசாரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் 2 பொது தேர்வுகள் நடைபெற்று வருவதால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை ஒத்திவைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரது பெஞ்ச் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தேர்தல் தேதியை மாற்றக்கோரி வாதிட்டனர்.

அதற்கு தேர்தல் ஆணைய வக்கீல் ராஜகோபாலன் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று கூறியதுடன் எதிர் தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிக்குலேஷன் உள்பட பள்ளித் தேர்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு தான் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே சட்டசபை தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்பதில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, என்றாலும் தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி 4 நிபந்தனைகளை கோர்ட் விதிக்கிறது.

அதன்படி, தற்போது நடந்து வரும் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள பள்ளி ஆசிரியர்களை மற்றும் பள்ளி பணியாட்களை எந்த காரணத்தைக் கொண்டும் தேர்தல் பணிகளுக்கோ அல்லது தேர்தல் தொடர்பான பயிற்சிகளுக்கோ தேர்தல் ஆணையம் பயன்படுத்தக் கூடாது. தேர்வுகள் அனைத்தும் நடைபெற்று முடியும் வரை பள்ளி ஆசிரியர்கள், பணியாட்களை தேர்தல் பணி என்ற பெயரில் தொல்லை செய்யக்கூடாது. பள்ளி வாகனங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது.

ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சென்று வரும் அரசு வாகனங்களையோ அல்லது கல்வி நிறுவனங்களின் வாகனங்களையோ தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு அமைதியான சூழ்நிலை அவசியம். எனவே தேர்வு நடக்கும் மையங்களில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு எந்த அரசியல் கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது. தேர்வு மையம் இருக்கும் பகுதிகளில் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணிகளிலும் ஈடுபடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png